ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கியூபா

கியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்து கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவரக்ள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக்குகியுள்ளது. 

1979 ஆம் ஆண்டு கியூபாவில் ஒரே பாலினம் சட்டபூர்வமாக்கப்பட்ட போதிலும், பல ஒரே பாலினத்தவர்களும், பெண்களும் வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டி வந்தனர். அதனை அடுத்து, கியூபா இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமண சட்டத்தை அங்கீகரித்துள்ளது.

சிறுபான்மையினரின் உரிமைகளை உயர்த்தும் புதிய குடும்பச் சட்டத்தை குடிமக்கள் அங்கீகரித்த பிறகு, கியூபாவின் தேசிய தேர்தல் கவுன்சில் ஒரே பாலின திருமணங்கள் சட்டபூர்வமானது என அறிவிக்கப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை (25) நடந்த வாக்கெடுப்பில் 74.1 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். 

நேற்று (26), 94 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டன, இதில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கியூபாவின் குடும்ப பாதுகாப்பு சட்டமானது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் LGBTQ ஜோடிகள், திருமணம் செய்துக் கொள்வதையும், குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதையும் அனுமதிக்கிறது.

கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் தீவு நாடான கியூபாவில், பல ஆண்டுகளாக மக்கள் பாகுபாடுகளை அனுபவித்தனர். 1960 களின் முற்பகுதியில் பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பிறகு, பல LGBTQ சமூகத்தினர் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள், அரசாங்க முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 

இருப்பினும், காஸ்ட்ரோவின் மகள் மரியேலா, ஓரினச்சேர்க்கையாளர்கள், லெஸ்பியன்கள் மற்றும் பிறரின் உரிமைகளுக்காக பகிரங்கமாக வாதிட்டதாக சிஎன்என்  தெரிவித்துள்ளது.

ஆசிரியர்