June 9, 2023 8:03 am

வன்புணர்வு குற்றச்சாட்டில் 20 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நபர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்

2004ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் டிஎன்ஏ ஆதாரத்தை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டோனி என்றும் அழைக்கப்படும் லிண்டல் கேம்ப்பெல், மே 9, செவ்வாயன்று கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து இரண்டு வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இருப்பார்.

“இந்தத் சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆன போதிலும், அது பாதிக்கப்பட்டவர் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பொறுப்பான நபர் இறுதியாக நீதியின் முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என, Met’s Specialist Crime Command-ஐச் சேர்ந்த துப்பறியும் அனியோன்வு கூறினார்.

அக்டோபர் 2004 இல், 20 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணியே குறித்த நபரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்