UNESCO ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தில் பிளவை உருவாக்க முயல வேண்டாம் என்று அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் UNESCO அமைப்பில் சேர்ந்துள்ள நிலையில் சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முன்னைய டிரம்ப் நிர்வாகத்தின்போது அமெரிக்கா அந்த அமைப்பிலிருந்து விலகியது.
அமெரிக்கா மீண்டும் UNESCO அமைப்பில் சேர்வதற்கு ஆதரவாக 132 நாடுகள் வாக்களித்தன. சீனா உட்பட 10 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன.
கடந்த ஆண்டுகளில் குறித்த அமைப்பிற்குக் கொடுக்கவேண்டிய பாக்கித் தொகையையும் அமெரிக்கா கட்ட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
அமைப்பில் மீண்டும் இணைவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் கடந்த ஆண்டு தொடங்கின.
சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள அதில் மீண்டும் சேர்வதற்கு பைடன் நிர்வாகம் முற்படும் என வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
UNESCOவில் மீண்டும் சேர்வதற்கான நிபந்தனயாக, 620 மில்லியன் டாலர் பாக்கித் தொகையைச் செலுத்த அமெரிக்கா சம்மதித்துள்ளது.
அமெரிக்கா இல்லாத நேரத்தில் UNESCOவின் மிகப்பெரிய நிதி ஆதரவாளராகச் சீனா இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.