இவ்வாண்டுக்கான மிஸ் நெதர்லாந்து அழகி பட்டத்தை திருநங்கை மாடல் அழகி ஒருவர் வென்றுள்ளார்.
22 வயதான டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல், இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றமை முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு பேசிய ரிக்கி, உலக அழகிப் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.
வெற்றிக்குப் பிறகு, தனக்கு நல்ல மற்றும் கெட்ட பதில்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.