ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலுள்ள முதியோர் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் நோயாளிகள் மூவர் பலியாகியுள்ளதோடு, 34 பேர் காயமடைந்துள்ளனர்.
20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உதவி கேட்டு அலறிய நோயாளிகள் பலரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பில் 72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.