செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு Jetstar Asia விமான சேவை நிறுத்தப்படுகிறது!

500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு Jetstar Asia விமான சேவை நிறுத்தப்படுகிறது!

1 minutes read

அவுஸ்திரேலியாவின் Qantas விமான நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia விமான சேவை நிறுத்தப்படுகிறது.

அதாவது, Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். எனினும், அவ் ஊழியர்களுக்கான பணிநீக்க இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் சேவையாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும் 4 வாரச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படும். அத்துடன் இவ்வாண்டுக்கான போனஸ் மற்றும் நன்றி தெரிவிப்பதற்காகச் சிறப்பு பண ஒதுக்கீடு ஆகியனவும் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களுக்கான பயணச் சலுகை பணிக்காலத்திற்கு ஈடான காலகட்டத்திற்குத் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. ஊழியர்களுக்கு குறித்த குழுமத்திலுள்ள ஏனைய விமான நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புத் தேடித் தர Qantas முயற்சிப்பதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jetstar Asia விமானச் சேவை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது மலிவு விலை ஏர்லைன்ஸ் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கியது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ், சீனா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு Jetstar Asia விமான சேவைகளை வழங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

இதன் சேவையை நிறுத்துவதால் ஆசியாவின் 16 விமான தள சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்வுகூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.