செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) நாளுக்கு நாள் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறே Google தேடுபொறியில் தேடல்களின் முடிவுகளை உரையாடல் வழியாக பெறும் வகையில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) தேடல் முடிவுகளை உரையாடல் பாணியில் சுருக்கித் தருவதை Gemini AI தொழில்நுட்பத்தின் ‘Audio Overviews’ தெரிவு வழங்குவதாக Google தெரிவித்தது.
தேடல் முடிவுகளை எளிதில் பெற அந்தத் தெரிவு வழங்கப்படுவதாக Google தெரிவித்தது. தேடல் முடிவுகள் ஒலிபரப்பப்படும்போது அதைக் கேட்டுக்கொண்டே மற்ற வேலைகளைச் செய்யலாம் என்றும் அது தெரிவித்தது.
தேடலுடன் தொடர்புடைய இணையத்தளங்களும் முடிவுகளில் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஓராண்டுகாலமாக AI Overviews தெரிவை Google அதன் தேடல் முறையில் அறிமுகம் செய்துள்ளது.
அதிலிருந்து பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.