செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்து-அமெரிக்க வரி ஒப்பந்தம்; கையெழுத்திட்டார் டிரம்ப்!

இங்கிலாந்து-அமெரிக்க வரி ஒப்பந்தம்; கையெழுத்திட்டார் டிரம்ப்!

1 minutes read

இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சில வர்த்தக தடைகளை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்.
அத்துடன், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இங்கிலாந்து கார்கள் மீதான வரிகளை குறைக்கும்.

டிரம்பின் வரிகளின் தாக்கத்திலிருந்து இங்கிலாந்து வணிகங்களைப் பாதுகாக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்பும் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை செயல்படுத்த பல வாரங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கார்கள் உட்பட பெரும்பாலான இங்கிலாந்து பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், உருக்கு இறக்குமதிகள் மீதான எதிர்பார்க்கப்படும் கட்டணங்களை நீக்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டில் பேசிய இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான நாள்” என்று கூறினார்.

கடந்த மாதம் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழையும் பல்வேறு பொருட்களுக்கு பரந்த அளவிலான வரிகளை விதித்ததிலிருந்து வெள்ளை மாளிகை அறிவித்த முதல் ஒப்பந்தமாகும்.

வணிகங்களும் நுகர்வோரும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக வாங்க ஊக்குவிக்கும் முயற்சியாக, அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்களின் மீதான வரிகளை டிரம்ப் உயர்த்தியுள்ளார்.

இது உலகம் முழுவதும் நிதி கொந்தளிப்பையும் எச்சரிக்கையையும் தூண்டியது.

இங்கிலாந்து உட்பட, கார் உற்பத்தியாளர்கள் மற்றும் உருக்கு தயாரிப்பாளர்கள் ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக அமெரிக்காவை நம்பியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.