செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இசை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பொதுமக்கள் 150 பேருக்கு ஊசி ஏற்றப்பட்டது!

இசை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பொதுமக்கள் 150 பேருக்கு ஊசி ஏற்றப்பட்டது!

0 minutes read

பிரான்ஸில் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கையில், அதைக் கண்டு களித்த பொதுமக்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் ஊசி ஏற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் 150 பேருக்கு ஊசி ஏற்றப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் மாத்திரம் இவ்வாறான 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக The New York Times தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், சம்பவத்தின் பின்னணி தொடர்பில் குறைந்தது 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் The New York Times குறிப்பிட்டது

ஊசி ஏற்றப்பட்ட சிலர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஊசிகளில் என்ன பொருள்கள் அடங்கியிருந்தன மற்றும் யார் கைதுசெய்யப்பட்டார்கள் போன்ற விவரங்களைப் பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிடவில்லை.

இவ்வாறான ஊசி ஏற்றப்பட்ட சம்பவங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று, அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.