செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு கதிர்கள் 2025ல்  கிளிநொச்சி பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்வடிவம்  

கதிர்கள் 2025ல்  கிளிநொச்சி பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்வடிவம்  

0 minutes read

கிளிநொச்சியின் புகழ்பூத்த பாடசாலையான  கிளி மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்க பிரித்தானிய கிளையினர் தமது பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி கதிர்கள் நிகழ்வினைக் கடந்த சனிக்கிழமை மேற்கு இலண்டனில் மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மறைந்த படைப்பாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களை நினைவுபடுத்தி அவர்களை எமது அடுத்த சந்ததியினருக்கு அறிமுகப்படுத்துவதுடன் அவர்கள் தமிழுக்கும், கலைகளுக்கும் ஆற்றிய சேவைகளை மதிப்பளித்து ஞாபகப்படுத்தும் முயற்சியாக அவர்களின் பெயர்களை விருந்தினர் இருக்கைகளுக்கு பதிவிட்டு கௌரவப்படுத்தியுள்ளார்கள் பிரித்தானியாவில் வாழும் கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்.

இந்நிகழ்வில் கிளி மத்திய கல்லூரியில் ஆசிரியர்களாக கடமையாற்றி தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் ஆசிரியர்களை மதிப்பளித்து கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் அவர்களது சேவைபற்றிய விபரணங்களை சபையோருக்கு அறிவித்திருந்தமையும் சிறப்பம்சம்.

மற்றும் கலைநிகழ்வுகளாக நடனங்களும் பாடல்களும் பழைய மாணவர்களும், அவர்களுடைய வாரிசுகளும் நிகழ்வை இறுதிவரை சுவாரஸ்யமாகவும், மகிழ்வாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும், அழகாகவும் 10 ம் ஆண்டில் நிகழ்வைச் சிறப்பாக நடாத்தினார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.