இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் ஆண்டின் வெப்பமான நாளை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (29) இலண்டனில் வெப்பநிலை 30C ஆகவும், இங்கிலாந்தின் கிழக்கில் 28C ஆகவும், மிட்லாண்ட்ஸில் 28C ஆகவும் இருக்கும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : இந்த வாரத்தில் வெப்பம் காரணமாக சுமார் 600 பேர் இறக்கலாம் என சந்தேகம்
தெற்குப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் தொடங்கி, மேற்கு மலைகளில் சிறிது தூறல் பெய்யும். ஆனால், வெயில் மற்றும் வறண்ட வானிலையும் அதிகமாக இருக்கும்.
ஐரோப்பாவில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், இங்கிலாந்தில் கடுமையான வெப்பம் காணப்படுவதுடன், கண்டம் முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.