County Down, Donaghadee இல் கர்ப்பிணியை கொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 27 வயதுடைய சாரா மாண்ட்கோமெரி (Sarah Montgomery) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மதியம் 1:15 மணிக்கு நகரத்தின் எல்ம்ஃபீல்ட் வாக் (Elmfield Walk) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மயக்கமடைந்த ஒரு பெண் பலத்த காயத்துடன் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
எனினும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்புகளை முன்னேடுத்து, மேற்படி இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
“இந்த மிகவும் துயரமான வழக்கு குறித்து விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன” என துப்பறியும் பொலிஸ் ஆய்வாளர் டாம் பிலிப்ஸ் கூறினார்.
“இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் சாராவின் குடும்பத்தினர் என்ன நடந்தது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள போராடுவதால், எங்கள் எண்ணங்களும் அவர்களைப் பற்றி உள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் அக்குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

சாரா மாண்ட்கோமெரி
“இந்தச் செய்தி சமூகத்திற்குள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் மீது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
“இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வது ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. மேலும், உள்ளூர் சமூகத்துடன் நேரடியாக இணைந்து ஆதரவை வழங்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், மக்கள் பாதுகாப்பாக உணரவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என வட பகுதி பொலிஸ் ஆய்வாளர் யுவோன் மெக்மானஸ் கூறினார்.