செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிரிக்ஸ் உச்சி மாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு பயணிக்கும் சீன ஜனாதிபதி!

பிரிக்ஸ் உச்சி மாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு பயணிக்கும் சீன ஜனாதிபதி!

1 minutes read

புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் என்பதுடன், 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு எல்லை மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் முக்கிய நகர்வாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இந்த விஜயம் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய போதிலும், வணிக மற்றும் முதலீட்டு உறவுகள் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களினால் கட்டுண்டு கிடப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி சுமார் 400 அதிகாரிகளைக் கொண்ட பாரிய தூதுக்குழுவுடன் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2019ஆம் ஆண்டு வருகை தந்த குழுவினரை விட இரு மடங்கு அதிகமாகும்.

எல்லைப் பகுதியில் நீடிக்கும் பதற்றங்களைத் தணிப்பது மற்றும் இருதரப்பு நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது தொடர்பில் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தொடர்ந்தும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 3,800 கிலோமீட்டர் நீளமுடைய இமயமலை எல்லைக் கோட்டில் 2020 இல் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, சீன நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், நூற்றுக்கணக்கான சீன செயலிகளையும் தடை செய்தது.

அண்மைய மாதங்களில் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குதல், விசா நடைமுறைகளைத் தளர்த்துதல் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை போன்ற இராஜதந்திர ரீதியான முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன.

எனினும், இந்தியாவிலுள்ள சீன நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை மற்றும் நிதி விசாரணைகள் தொடர்வதும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகக் கடுமையான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதும் வணிக ரீதியான முழுமையான இயல்பு நிலைக்குத் தடையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், ஆசியாவின் இவ்விரு பெரும் பொருளாதார சக்திகளையும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஊடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.