செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா குடியேற்றத்தை கட்டுப்படுத்தாவிடின் பாரிஸ் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்: ட்ரம்ப்பின் கருத்து சர்ச்சை!

குடியேற்றத்தை கட்டுப்படுத்தாவிடின் பாரிஸ் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்: ட்ரம்ப்பின் கருத்து சர்ச்சை!

1 minutes read

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டின் எல்லைகளை மூடி, குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸில் தற்போது இடம்பெற்று வரும் அமைதியின்மை மற்றும் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு அந்நாட்டின் தளர்வான குடியேற்றக் கொள்கையே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பாரிஸ் நகரம் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள போராட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே ட்ரம்ப் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் தனது எல்லைகளை உடனடியாக மூட வேண்டும் என தாம் மக்ரோனிடம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதாகவும், தற்போதைய வன்முறைகள் மற்றும் குழப்பங்களுக்குக் கட்டுப்பாடற்ற குடியேற்றங்களே வழிவகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அதிருப்திக்கு அமெரிக்காவே காரணம் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது தொடுத்துள்ள போரின் காரணமாகவே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாகவும், இதன் விளைவாகவே பிரான்ஸில் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருவதாகவும் மக்ரோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தக் குற்றச்சாட்டுகள் சர்வதேச இராஜதந்திர அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.