செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி

1 minutes read

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்துத் தனது இறுதி அஞ்சலியைச் செலுத்திய அவர், அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 69 ஆவது வயதில் காலமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் இன்று (16) நடைபெறவுள்ளன. வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடல், இன்று மதியம் வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்குப் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகச் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 14 ஆம் திகதி இரவு தனது இல்லத்தில் காலமானார்.

வடமராட்சி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் மக்கள் சேவையாற்றி வந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் சமரசமின்றிக் குரல் கொடுத்து வந்த அவரது மறைவு, தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்திலும் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.