1
கனடா நாட்டில் ஒரு உள்ளூர் ஐஸ் ஹொக்கி போட்டியில் விளையாடுவதற்காக 28 பேர் கொண்ட குழு ஒன்று ஒரு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்பொழுது வீரர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொக்கி வீரர்கள் உயிரிழந்த இச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
