அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி, ஒரு பாடமாக கற்றுத் தரப்படும் என அம் மாகாண அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. இது அவுஸ்ரேலியா வாழ் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப் பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கவின் பெரும்பாலான நாடுகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக உள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.