செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்!

ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்!

1 minutes read

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு இன்று(வியாழக்கிழமை) நண்பகல் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சென்னை திரும்பிய பிறகு இன்று நண்பகல் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 29 ஆம் திகதி தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கை மூலமாக தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 3 நாட்களாக போயஸ்கார்டன் இல்லத்தில் வா தலைவா வா என்ற கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியை சந்திக்கும் கமல்ஹாசன் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.