இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனாவையும் எதிர்க்கக்கூடிய வலிமை இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசிகளுக்கு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் பலன்கள் மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “வதந்திகளைப் பரப்புவோருக்கு இந்த மருந்துகள் தரமானவை என்று உறுதியளிக்கிறேன். இங்கிலாந்தில் இருந்து பரவிய வீரியம் மிக்க கொரோனாவையும் இந்த மருந்துகள் முறியடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது கேவலமானது என்றும் காங்கிரசுக்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.