Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆப்கானிஸ்தானில் இருந்து 70 இற்கும் மேற்பட்டவர்கள் இந்தியா வருகை!

ஆப்கானிஸ்தானில் இருந்து 70 இற்கும் மேற்பட்டவர்கள் இந்தியா வருகை!

1 minutes read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 25 இந்தியர்கள் உள்ளிட்ட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காபூலில் இருந்து தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேக்கு இந்திய விமானப்படையின் மூலம் அழைத்து செல்லப்பட்டவர்கள் பின் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு 6 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More