செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

0 minutes read

இந்தியாவில் புதிதாக 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து 49 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் ஒரே நாளில் 509 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 37 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்து 52 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.