செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு; மக்களை வெறும் வயிற்றுடன் தூங்கச் சொல்கிறார் மோடி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு; மக்களை வெறும் வயிற்றுடன் தூங்கச் சொல்கிறார் மோடி!

1 minutes read

புதுடெல்லி,: டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவர் அளித்த பேட்டியில், “ஜிடிபி உயர்வுக்கு ஒன்றிய அரசு புதிய அர்த்தத்தை கொண்டு வந்துள்ளது. அது காஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு என்பதாகும். கடந்த 7 ஆண்டுகளில் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு மூலமாக ஒன்றிய அரசு ₹23 லட்சம் கோடியை சம்பாதித்துள்ளது.

ஆனால், இந்த பணம் எங்கே போகிறது? ஒரு பக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மறுபக்கம் பணமாக்குதல் நடவடிக்கை. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சம்பளம் பெறுவோர் மற்றும் நேர்மையான தொழிலதிபர்களின் பணம் மதிப்பிழப்பு செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியின் நான்கு, ஐந்து நண்பர்களுக்காக பணமாக்குதல் திட்டம் நடைபெறுகிறது. ஏழைகள், இல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டு பிரதமரின் நண்பர்களிடம் கொடுக்கப்படுகிறது,’’ என்றார்.

முன்னதாக ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பொதுமக்களை வெறும் வயிற்றோடு தூங்கும்படி கட்டாயப்படுத்துபவர், நண்பர்களின் நிழலில் தூங்குகிறார். ஆனால், இந்த நாடு அநீதிக்கு எதிராக ஒன்றுபடுகிறது,’ என கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உங்கள் ஆட்சியில் இரண்டு வளர்ச்சி தான் நடக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.