செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு!

இந்தியாவில் வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு!

0 minutes read

வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

வாகனத்தை பொலிஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள்.

மேலும் அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மாத்திரம் கட்சி கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தலாம்.

அதாவது, வாகனங்களின் வெளிப்புறங்களில் புகைப்படங்களை பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை.

வாகன உரிமம் புதுப்பித்தல், முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

குறித்த  உத்தரவுகளை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.