Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி!

10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி!

1 minutes read

சென்னை: 10,11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்ததை தொடந்து, பிளஸ் 2 வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட வழிகாட்டுநெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், 10-ம்வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்குவது போல இருப்பதால், 10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More