Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட...

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.

கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ மற்றது!

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள்...

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்!

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ஆசிரியர்

‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டில் ரூ2120 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695  பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ”ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நேற்று மாநாடு நடந்தது. இதில், ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: இந்தியா முழுவதும் கடந்த 20 முதல் 26ம் தேதி வரையிலான ஒரு வாரம் வர்த்தகம் மற்றும் வணிக வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இதனை அறிவித்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற விழாவை தமிழக தொழில்துறை அமைச்சரும், ஊரக தொழில்துறை அமைச்சரும் ஏற்பாடு செய்துள்ளார்கள். அமைச்சர்களுக்கும், துறை சார்ந்த உயரதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் வளர்ச்சி என்பது உங்கள் துறை வளர்ச்சி மட்டுமல்ல, அது அனைத்து துறைகளின் வளர்ச்சி என்பதை உணர்ந்தவன் நான். அதுதான் இந்த மாநிலத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியாகும். தொழில்துறை வளர்கிறது என்றால் அனைத்து துறைகளும் வளர்கிறது என்று பொருள்.

எனவேதான் இதுபோன்ற மாநாடுகள், கண்காட்சிகள் தமிழகத்தில் அதிகம் நடைபெற வேண்டும். சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடைபெற வேண்டும்.
இன்றைய தினம் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக, பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்தது இல்லை.

அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது. உலக வர்த்தகர்களும் வணிகர்களும் ஒன்றுகூடும் இடமாக நம்முடைய தமிழ் நிலம் இருந்துள்ளது. அத்தகைய பழம்பெருமையை நாம் மீட்டாக வேண்டும். நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.  அதாவது, உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும். உலகம், தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழக தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும். அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும்.

இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ரூ1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன்,  இந்தியாவிலேயே  தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. 2020-21ம் ஆண்டிற்கான அகில  இந்திய  அளவிலான ஏற்றுமதியில்,  தமிழ்நாட்டின்  பங்களிப்பு 8.97 சதவீதம். மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 சதவீதம் பங்களிப்பு தருகிறது. காலணி ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிப்பு தருகிறது. மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25 சதவீதம் பங்களிப்பு அளித்து வருவது மிகவும் பெருமைக்குரியது. இந்த விழுக்காடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வர வேண்டும்.

வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து தோல் பொருட்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருந்து  ஜவுளி, சென்னையில் இருந்து  மோட்டார் வாகன பொருட்கள் என்று  பரவலான வகையில் சீராக ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வர்த்தக தரத்துக்கு ஏற்றவகையில் மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் ஏற்றுமதி பெருகும். அதனால்தான் வேலைவாய்ப்பும் பெருகும். இது மாநிலத்துக்கும் வருமானம் ஈட்டித் தரும். இத்தகைய சுழற்சி அடிப்படையில் முன்னேற்றம் அமைய வேண்டும். தமிழ்நாடு என்றாலே மோட்டார் வாகனங்கள், ஜவுளி – ஆடை அணிகலன்கள், தோல் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றின் தயாரிப்பில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும்.

அந்த வரிசையில் மின் வாகனங்கள், மின்சக்திக் கலன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல்,  உணவு பதப்படுத்துதல், வான்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் தமிழ்நாட்டுக்கான ஏற்றுமதி திறன் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்கள் என்று ஏராளமாக இருக்கிறது. அதற்கு உலகளாவிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டுச்சேலைகள், சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைகள்,  கோயம்புத்தூர் கிரைண்டர்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் – தட்டுகள், சுவாமிமலை சிற்பங்கள், பவானி ஜமக்காளம், பத்தமடை பாய்கள், மதுரை மல்லி, மாமல்லபுரம் கற்சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம் என புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வெளிநாடுகளில், இந்த பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.  இவற்றை அதிகமாக தயாரிக்க வேண்டும். 2030ம் ஆண்டிற்குள்  1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு  அடைந்திட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளோம். இதை அடைய வேண்டுமெனில், தற்போது 26 பில்லியன் அமெரிக்க  டாலராக  இருக்கும்  மாநிலத்தின் ஏற்றுமதியை, 2030ம் ஆண்டிற்குள் 100  பில்லியன் அமெரிக்க  டாலராக உயர்த்திட வேண்டும்.  உலக வர்த்தக வரைபடத்தில், தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வருகின்றோம், இந்த லட்சியத்தை அடைவதற்கு, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய அரசின் வணிகத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர்  அருண் ராய் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். ஒன்றிய வர்த்தக துறையின் கூடுதல் இயக்குநர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.

42 கண்காட்சி அரங்குகள்
சென்னை கலைவாணர் அரங்கில் 21 ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார்.  இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை காட்சிப்படுத்திய 42 கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டு இருந்தது. அதில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கார்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஆடை-ஆபரணங்கள், காலணிகள், தோல் பொருட்கள், சாமி சிலைகள், பூஜை பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
‘தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை’யை வெளியிட்டதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியை மேலும்  மேம்படுத்த, தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதேபோல், குறு சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு வழிகாட்டும் “குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி  நிறுவனங்களுக்கான கையேடு”இன்று வெளியிடப்பட்டுள்ளது. தென்  தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட, தூத்துக்குடியில், ஏற்றுமதியை மையமாக கொண்ட “சர்வதேச அறைகலன் பூங்கா”ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு  வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி  திட்டங்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதிகள் தொடர்பான இடர்பாடுகள் களைதல், அனுமதிகள் பெற்றுத் தருதல் ஆகிய  பணிகளை மேற்கொள்ள வழிகாட்டி நிறுவனத்தில், ஏற்றுமதி அமைப்பு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உலகத்தரம் வாய்ந்த  உள்கட்டமைப்பு வசதிகளுடன், மாநல்லூரில் 6000 ஏக்கர் பரப்பளவிலும், தூத்துக்குடியில் 5000 ஏக்கர் பரப்பளவிலும் சிப்காட் நிறுவனம்  மூலம் 2 பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகளை உருவாக்கவும் அரசு  திட்டமிட்டுள்ளது.

திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும்  ஓசூர் ஆகிய 10 ஏற்றுமதி மையங்கள்  மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொகுப்பு சலுகைகள்  வழங்க ஒரு திட்டம் வடிவமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

தேனி, திண்டிவனம், மணப்பாறையில் உணவு பூங்கா
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்”உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, தோல் தொழில் துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவமும், ஆதரவும் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில், ரூ406.06 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் 10 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்திற்காக, 15 சதவீதம் மானியம் என்ற அளவில் ரூ60.91 கோடி மானியம் வழங்கிட, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பருத்தி, பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்படும் 1% சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள், தொழில்முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள்,  வியாபாரிகள் ஆகியோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த 1% சந்தை நுழைவு வரியை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  இதன் விளைவாக, இந்திய பருத்தி கார்ப்பரேஷன், தற்போது சேலம், மதுரை, கோயம்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக்  கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தின்  வளர்ச்சி மற்றும் சேவைகளின் மூலமாக, உலக வர்த்தகம் முன்னெப்போதையும் விட, பன்மடங்கு பெருகி வருகின்றது. இது நம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு  மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் M-TIPB நிறுவனம், பிலிப்கார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க திருச்சி – நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருவழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, மணப்பாறை மற்றும் திண்டிவனம் ஆகிய 3 இடங்களில் உணவு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.  “வேளாண் ஏற்றுமதி சேவை மையமும்” உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு அடையும் வளர்ச்சி என்பது இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

ஓடிடி-க்கு செல்லும் கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்!

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து...

மேலும் பதிவுகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள்!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் குழுவுக்குப் பிறகு நிலைமையைக் கட்டுப்படுத்த...

மாங்காய் வற்றல் குழம்பு!

தேவையானவை:மிளகு – 25,காய்ந்த மிளகாய் – 4,கடலைப்பருப்பு,துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,மாங்காய் வற்றல் – 4 துண்டுகள்,புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு...

இலங்கையில் விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...

துரோகிகள் என குறிவைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில்!

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறிவைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற...

முன்னாள் அமைச்சர் ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு!

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிந்திய செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

துயர் பகிர்வு