செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால் இந்திய இராணுவமும் நீடிக்கும்!

லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால் இந்திய இராணுவமும் நீடிக்கும்!

0 minutes read

கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் அப்பகுதியில் நீடிக்கும் என இராணுவத்தளபதி நரவனே உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா, இராணுவக் கட்டமைப்பையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வரும் நிலையில், நரவனே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ கட்டமைப்பை சீனா மேம்படுத்துவது, அவர்கள் அங்கு நீடிப்பதையை காட்டுகிறது என தெரிவித்த நரவனே, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு மேம்பாடு, போதியளவில் தளபாடங்கள் உள்ளிட்ட இந்தியப் படைகளின் விரைவான செயற்பாட்டால், சீன இராணுவத்தினரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கவலை தெரிவித்த அவர், இந்த செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.