செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்!

கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்!

0 minutes read

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த முயற்சியால் இரு நாட்டு மக்களிடையே நல்லுறவு பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.