செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட்

0 minutes read

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து வீதியோர கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கருடன் பிரிட்டன் அரச குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடியமை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், மும்பையில் நாளை செவ்வாய்க்கிழமை (17) நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ‘எர்த்சொட் பரிசு’ விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான தீர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இளவரசர் வில்லியமினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, உலகளாவிய சுற்றுச்சூழல் முயற்சிகளை அங்கீகரித்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.