சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை சிறிலங்காவில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகளை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
பதற்ற நிலை தொடர்பான தகவல்கள், படங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் பகிரப்பட்டதால், நிலைமைகள் மோசமடைந்ததைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கண்டி உள்ளிட்ட சில பகுதிகளிலேயே, சமூக வலைத்தளங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான போதும், தற்போது நாடு முழுவதிலும் இவை முடக்கப்பட்டுள்ளன.
