அதுருகிரிய, கல்வருசாவ பிரதேசத்தில் இன்று (19) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுவல, புவக்தெனிய பகுதியைச் சேர்ந்த நிமல்சிறி தலகர என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
