சட்டவிரோதமாக சிங்கபூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை தங்கம் கட்டுநாயக்கவில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுங்க பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தனது பயணப்பொதியில் சூட்சுமமான முறையில் இவற்றை மறைத்து கொண்டு வந்துள்ளார். இவற்றின் பெறுமதி ஒன்றரை கோடிக்கும் அதிகமாகும் என கட்டுநாயக்க சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் மட்டக்களப்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 32 வயதுடைய நபர் என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
