செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இராணுவத் தளபதியிடம் விடுத்த கோரிக்கை!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இராணுவத் தளபதியிடம் விடுத்த கோரிக்கை!

0 minutes read

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகததில் இன்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி தம்மிடம் உறுதியளித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.