செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைஇருந்தால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்பமுடியும்……

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைஇருந்தால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்பமுடியும்……

0 minutes read

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளையோர் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸநாட்டை ​முன்னேற்றத் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

சட்டத்தை வளைத்த நீதிமன்றம், அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களம், இரவு வேளையில் இளைஞர்களை விபத்திற்குள்ளாக்கி வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக அவர்களை மாற்றிய அரசியல்வாதிகள் இருக்கும் சமூகம் இதுவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் மற்றும் சட்டத்துறையில் நீதியை நிலைநிறுத்துவதே தமக்குள்ள சவால் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஓவியம் வரைந்த, மண்வெட்டியைக் கையில் ஏந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.