செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

இலங்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

1 minutes read

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று (திங்கட்கிழமை) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதற்கமைய பிரதான நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளைத் தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

இதன்படி, காலி மாவட்டத்தில் 50 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும் கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும் ஹற்றன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும் நுவரெலியா- அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ்வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.