Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை–இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

இலங்கை–இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!

1 minutes read

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடித்ததில், “கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனையவரை தேடும் பணி 18.10.2021 முதல் நடைபெற்று வருகிறது.

மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும் காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்கவும்.

இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவும்” என கேட்டுக்ககொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More