Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கலந்துகொண்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்!

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கலந்துகொண்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்!

1 minutes read

கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா விலை அதிகரிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

விலை அதிகரிப்பால் மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் அமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாகவும் அரசாங்கத்தினை இதன்போது சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More