Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

புதுச்சேரியில் முதலமைச்சர், தலைமை செயலாளர் இடையே மோதல்?

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ,தலைமை செயலாளர் இடையே மோதல் காரணமாக சட்டமன்றத்தில் அறிவித்த மக்கள்நல திட்டங்கள் மற்றும் மழை நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது....

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர்...

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை கவலை அளிக்கிறது | இந்தியா

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ்...

ஆசிரியர்

கடலில் இறங்கிப் போராடிய தமிழ் அரசியல்வாதிகள்?

மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும்.

2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இடையிலான மோதலாக உருப்பேருக்காமல் அதை எப்படி மீனவர்களைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.

ஆனால் மீனவர்களின் விவகாரத்தை கையில் எடுக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீனவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்தே முடிவெடுடுகின்றனர். அல்லது முடிவெடுக்காமல் ஒத்தி வைக்கின்றனர் என்பதே கடந்த 12ஆண்டுகால அனுபவம் ஆகும்.இந்த விவகாரத்தை மீனவர்களின் வாக்கு வங்கிகளை பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் சில தமிழ் கட்சிகள் சிந்திப்பதாக தெரிகிறது. ஒரு தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில் அதாவது மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டுவது என்ற அடிப்படையில் அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை.அப்படி சிந்தித்திருந்திருந்தால் அவர்கள் பின்வரும் விடயங்களை கவனத்திலெடுத்திருப்பார்கள்.

முதலாவதாக, இந்த விடயத்தை இந்திய-இலங்கை அரசுகள்தான் பேசித் தீர்க்க வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதிகள் முதலில் இரண்டு அரச பிரதிநிதிகளோடும் பேசவேண்டும். தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அல்லது கொழும்பிலுள்ள தூதரகம் போன்றவற்றினூடாக இந்திய மத்தியஅரசோடு அதைக்குறித்துப் பேச வேண்டும். அதேசமயம் தமிழக மீனவர்கள் சம்பந்தப்படுவதால் தமிழக அரசோடும் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சரோடும் பேசவேண்டும். இதுவிடயத்தில் ஈழத்துமக்கள் பிரதிநிதிகளும் தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்களுக்கிடையே ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கட்சி பேதமின்றி ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள (பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று விரும்புகின்ற எல்லா தரப்புக்களும்) ஒன்றுபடவேண்டும். அதன்மூலம் இந்திய மத்திய அரசை நோக்கி அழுத்தத்தை பிரயோகிக்கலாம். அதேசமயம் இலங்கை அரசாங்கத்தை நோக்கியும் அழுத்தத்தை கொடுக்கலாம்.

இரண்டாவதாக,,எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்வதை அல்லது அவர்களுடைய படகுகளை மூழ்கடித்து அவர்களை நீரில் மூழ்கி இறக்கவைப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுவிடயத்தில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் கடற்படையால் கொல்லப்படும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். அதேசமயம் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் ஈழத்துக் கடலின் வளங்களைச் சுரண்டும்போதும் கடலின் கருவளத்தை அழிக்கும் போதும் ஈழத்து மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். எனவே இது ஒரு நுட்பமான விடயம். கத்தியில் நடப்பது போன்றது. கவனமாக கையாள வேண்டும்.

அதாவது போராட்டத்தின் இலக்குகள் குறித்து பொருத்தமான அரசியல் தரிசனங்கள் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான தரிசனங்கள் எவையும் கடந்தகிழமை கடலில் இறங்கிப் போராடியவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் உட்கட்சிப் பூசல்களை இவ்வாறான போராட்டங்களின் மூலம் மேவிச்சென்று கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்த முயல்கிறார்களா என்ற சந்தேகம் உண்டு. மீனவர்களுக்காக போராடுவது என்று சொன்னால் அதை அவர்கள் எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த அரசியல்வாதிகள் அந்தக்காலத்திலேயே அதை சட்ட ரீதியாக தீர்த்திருக்கலாம். அதில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைத்திருக்கலாம். ஆனால் அக்காலகட்டத்தில் அதை அவர்கள் செய்யவில்லை.

மூன்றாவதாக, ஒரு தேசமாக சிந்தித்து ஈழத்து மீனவர்களின் பிரச்சினைக்காக போராடும் அதே சமயம் அந்தப் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதாக மாறாதபடிக்கு அதை பக்குவமாகத் திட்டமிட வேண்டும். அதை ஒரு தனிக்கட்சி செய்யமுடியாது. சம்பந்தப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளும் கூட்டாக முடிவு எடுக்க வேண்டும். நினைவு கூர்தல் பொறுத்து கடந்த ஆண்டில் அவ்வாறு கட்சிகள் முடிவெடுத்தன. அதுபோல மீனவர்களின் விடயத்திலும் ஆகக்குறைந்தது ஒரு விவகார மைய கூட்டுக்கு தமிழ் கட்சிகள் போகவில்லை. அதை முன்னெடுத்த கூட்டமைப்பும் ஐக்கியமாகப் போராடவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதில் பங்கு பற்றவில்லை. தவிர தமிழரசுக் கட்சிக்குள்ளும் மாவையின் அணி அதில் பங்கெடுக்கவில்லை. அந்தப் போராட்டம் கூட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை என்பதனை வெளிப்படுத்திய ஒரு போராட்டம். எனவே அது தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்துக்கட்சி போராட்டமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

நாலாவதாக, அந்த போராட்டத்தை இரண்டு அரசுகளையம் நோக்கி நீதி கேட்கும் போராட்டமாக வடிவமைத்திருக்க வேண்டும்.மாறாக அது இந்திய மீனவர்களுக்கு எதிரானது என்று வியாக்கியானம் செய்யத்தக்க விதத்தில் மாறாட்டம் செய்யப்படக் கூடிய விதத்தில் போராடி இருந்திருக்கக் கூடாது. அதாவது சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று ஒரு திரளாக நின்று மீனவர்களுக்காக முதலில் சம்பந்தப்பட்ட அரசுகளோடு உரையாடி இருக்க வேண்டும். அது வெற்றி பெறவில்லை என்றால் போராடி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதனால்தான் அப்போராட்டம் வாக்குவேட்டை அரசியல் நோக்கிலானதா? என்று கேட்க வேண்டியிருக்கிறது. அல்லது கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல்களைக் கடந்து தனது தலைமைத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் ஒரு பகுதியினர் அப்போராட்டத்தை முன்னெடுத்தார்களா? என்ற கேள்விக்கும் எழுகிறது.

இரண்டு மீனவ சமூகங்களுக்கிடையிலான ஒரு விவகாரத்தை,  இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஒரு சர்வதேசக் கடல் எல்லை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு விவகாரத்தை, மிகக் குறிப்பாக தமிழக மீனவர்களின் உயிர்களும் ஈழத்து மீனவர்களின் சொத்துக்களும் வளங்களும் அழிக்கப்படும் ஒரு விவகாரத்தை, அதற்குரிய பக்குவத்தோடு அணுகியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சிந்திக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்தும் உள்நோக்கத்தோடு சில மக்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்களா?

ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெறாத போராட்டங்கள் பல உண்டு.காணிக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றோடு மீனவர்களின் விவகாரமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைதான்.ஆனால் அது முன் கூறப்பட்ட விவகாரங்கள் போல ஒரு தொடரான போராட்டமாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனெனில் அது முன்பு கூறப்பட்ட விவகாரங்களில் இருந்து வேறுபட்டது. முன்கூறப்பட்ட போராட்டங்களில் யாருக்கு எதிராகப் போராடுவது என்பதிலும் யாரிடம் நீதி கேட்பது என்பதில் ஒரு தெளிவு இருந்தது. ஆனால் மீனவர்களின் விவகாரத்தில் யாருக்கு எதிராக போராடுவது என்பதில் ஒரு தெளிவின்மை ஒரு கலங்கலான நிலைமை காணப்படுகிறது.

அது தமிழக மீனவர்களுக்கு எதிரானதா? அல்லது அப்பாவி மீனவர்களை தொழிலுக்கு அனுப்பிவிட்டு கரையிலிருந்து உழைக்கும் பெருமுதலாளிகளுக்கு எதிரானதா? அல்லது அப்பெருமுதலாளிகளுக்கு சாதகமாக சிந்திக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரானதா? அல்லது எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களின் உயிரைப் பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதா? அல்லது ஓர் அனைத்துலக கடல் எல்லைக்கு அப்பால் கொல்லப்படும் தனது பிரஜைகளைக் குறித்து உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசுக்கு எதிரானதா? அல்லது தமிழக அரசு கேட்டுக் கொண்டாலும் இது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய இந்திய மத்திய அரசுக்கு எதிரானதா? அல்லது இரு தரப்பு மீனவர்களையும் பகைவர்களாக்க முயற்சிக்கும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானதா ? அல்லது குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு விரோதமான முறைமைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கும் உலகளாவிய முறைகளுக்கு எதிராக வலிமையான சட்டங்களை உருவாக்கத் தவறிய இலங்கை அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எதிரானதா? என்பதை குறித்து போராட முதல் தீர்க்கதரிசனத்தோடு முடிவெடுக்க வேண்டும்.

இதுவிடயத்தில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் தமிழர்கள் என்பதனால்தான் கொல்லப்படுகிறார்கள் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் அல்லாத வேறு இந்திய இனங்களாக இருந்தால் அவர்களை இலங்கை கடற்படை எப்படி அணுகும்? என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும்.

எனவே நிதானமாகவும் ஒரு தேசமாக சிந்தித்தும் அணுகப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை கட்சிக் கண் கொண்டு அல்லது தேர்தல் கண் கொண்டு அல்லது கட்சிக்குள் காணப்படும் உட்பகைகளை முறியடித்து தனது தலைமைத்துவத்தை காப்பாற்ற முயலும் சில அரசியல்வாதிகளின் கண்கொண்டு அணுகக்கூடாது. கடந்த கிழமை நடந்த போராட்டமானது மக்கள் மயப்பட்டவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான, இரண்டு சமூகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நிதானமாக கையாள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. யார் எதிரி என்பதில் போதிய தெளிவின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. கடந்த 12ஆண்டுகளாக தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி பெறாத போராட்டங்களின் வரிசையில் அது சேர்த்துக்கொள்ளப்படும். அதேசமயம் தமிழ் அரசியல்வாதிகள் கட்சிகளையும் தலைமைத்துவத்தையும் வாக்கு வங்கியையும் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கிறார்களே தவிர தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கவில்லை என்பதனையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது.

நிலாந்தன்

இதையும் படிங்க

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி- உமையாள்புரம் சோலை நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. கடந்த...

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய நாட்டில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (திங்கட்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையை பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்!

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் பாராட்டத்தக்க நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார். போருக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

மேலும் பதிவுகள்

இலங்கையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது எரிவாயு விநியோகம் !

பாவனையாளர் அலுவல்கள் அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை அறிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று முதல் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர்...

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  தி.மு.க....

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

கினுவா வெஜிடபிள் சாலட்!

தேவையான பொருட்கள் :கினுவா - கால் கப்வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்றுப்ராக்கோலி - பாதியளவுகெட்டியான தக்காளி - 2ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்பூண்டு - 2...

குளிர் கால பிரச்சினைகளுக்கு யோகா தரும் தீர்வு

ஸ்டெப் 1: விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும். கைகளை அழுத்தி வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு