இலங்கையில் உர இறக்குமதியில் நிதி மோசடி!

நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மேலும் பக்கச்சார்பின்றி விசரணையை நடத்தி இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.

ஜே.சி.அலவத்துவல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட உறுப்பினர்களே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

ஆசிரியர்