Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி?

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி?

1 minutes read

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தாமதமானது என அவர் தெரிவித்தார்.

இந்த வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More