தண்டவாளத்தை விட்டு விலகி வீடுகளுக்குள் புகுந்த ரயில்

தெமட்டகொட புகையிரத தடத்தில் பயணித்த ரயில் ஒன்று தண்டவாளத்தைவிட்டு விலகி அங்கிருந்த பழைய கட்டடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தெமட்டகொட புகையிரத தளத்தில் நிறுத்துவதற்காக சென்ற ருஹுனு குமாரி என்ற ரயிலின் இயந்திரம் இயந்திர சாரதியின் அறைக்குள் மோதியதில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த விசாரணைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்