கோட்டாபயவை சந்தித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

கோட்டாபயவுடன் சந்திப்பு

இந்த நிலையிலேயே அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

கோட்டாபயவை சந்தித்துள்ள சுப்ரமணியன் சுவாமி | Subramanian Swamy Meets Gotabaya Rajapaksa

இதன்போது கோட்டாபய ராஜபக்சவுடன், சுப்பிரமணியன் சுவாமி பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சுப்பிரமணியன் சுவாமி சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery

ஆசிரியர்