கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் 4,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்   தங்களது மின் கட்டணம் 4,000 ரூபாவுக்கு மேல் உள்ள மின் பாவனையாளர் உடனடியாக கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை  தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, கட்டணம் செலுத்தாத நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் செலுத்த வேண்டிய மின் கட்டணப் பட்டியலின் முழுத் தொகையினையும் செலுத்துவதோடு, மீள இணைப்பதற்கான மேலதிக கட்டணம் 3,000 ரூபாவும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்