சிகரட்டுகளின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு

கோல்ட்லீப் மற்றும் ‘பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்’ ரக சிகரெட்டுகளின் விலை தலா விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு வரி அறவிடும் நடவடிக்கை நேற்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக இவ்வாறு சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகரட்டுகளின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு | Price Of Cigarettes Increased By Rs 5

அதன் பிரகாரம் கோல்ட்லீப் சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாவாகவும், ‘பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்’ சிகரெட்டின் புதிய விலை 90 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிறுவனத்தின் ஏனைய சிகரெட் தயாரிப்புகளான கெப்டன், பிரிஸ்டல் மற்றும் டன்ஹில் போன்றவற்றின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் இலங்கைப் புகையிலை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்