0
விலைச் சூத்திரத்திற்கு அமைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (5) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், லிட்ரோ நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.