செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளைய போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள் | வஜிர அபேவர்தன

நாளைய போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள் | வஜிர அபேவர்தன

0 minutes read

நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களை துரோகிகளாகவே கருத வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்குலைப்பதில் பங்கேற்பதால் நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் துரோகிகளாகவே கருதப்பட வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

“அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் இலங்கை ஒருவித ஸ்திரத்தன்மையை அடைய முடிந்தது. இருப்பினும், இதுபோன்ற போராட்டங்களால் இந்த சாதனைகள் அனைத்தையும் நாடு இழக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மேலும் சீர்குலைப்பதற்காக சில அரசியல் குழுக்கள் சில சர்வதேச சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளன.

“மக்கள் புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் பணியாற்றினால், ஒரு வருடத்தில் இலங்கை ஒருங்கிணைக்கப்படும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.