செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல்போனோர் உயிருடன் இருப்பது சந்தேகம்! – நீதி அமைச்சர் கூறுகின்றார்

காணாமல்போனோர் உயிருடன் இருப்பது சந்தேகம்! – நீதி அமைச்சர் கூறுகின்றார்

0 minutes read

காணாமல்போனோர் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்குச் சாத்தியம் மிகவும் குறைவு என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“காணாமல்போனோரின் குடும்பங்களின் துயரங்களை – உணர்வுகளை நாம் புரிந்துகொள்கின்றோம். அவர்களை நாம் மதிக்கின்றோம்.

உறவுகளைத் தொலைத்த துயரத்திலும் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற ஏக்கத்துடனும் வாழும் குடும்பங்கள் நீதி கேட்டு அரசுக்கு எதிராகப் போராடுவதில் நியாயம் இருக்கின்றது. ஆனால், அவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தமது சுயலாப அரசியலை மேற்கொள்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயம்.

காணாமல்போனோர் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்குச் சாத்தியம் மிகவும் குறைவு. இதை அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினால் அவர்கள் ஏற்கத் தயாரில்லை. நாம் என்ன செய்வது?

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.