பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் ரணில் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா.
அவர் மேலும் கூறுகையில்,
“ராஜபக்ச அரசு வேறு; ரணில் அரசு வேறு. தற்போது ஆட்சியில் இருப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு.
இந்த ஜனாதிபதியும் சரி, இந்த அரசும் சரி தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணத் தயாராகவுள்ளது.
ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்த அரசுடன் நெருங்கிச் செயற்படுகின்றனர். இன்னொரு பகுதியினர் இந்த மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகின்றனர். மற்றொரு பகுதியினர் தங்களுக்கிடையிலான கட்சி ரீதியிலான மோதலால் ஒதுங்கி நிற்கின்றனர்.
பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும்” – என்றார்.