March 26, 2023 11:05 pm

ஆசிரியர்கள் இருவருக்கு எதிராக விசாரணை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பின் பிரபல்யமான பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இரண்டு பேர் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாணவர் ஒருவரை மிக மோசமாக தாக்கியதாக இரண்டு ஆசிரியர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தரம் 11ல் கற்கும் மாணவன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை

கொழும்பின் பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இருவருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை | Colombo School Human Rights Commission Sri Lanka

தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டில் குறித்த கல்லூரியின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மூவரிடமும் விரைவில் விசாரணை நடாத்தப்பட உள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்