May 31, 2023 4:38 pm

வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி; 16 பேர் படுகாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, நொச்சுமோட்டை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது

இதன்போது பஸ்ஸின் `சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் படுகாயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த மற்றுமொரு அதி சொகுசு பஸ்ஸின் சாரதி தனது பஸ்ஸை விபத்தில் இருந்து தடுப்பதற்காக வீதியின் ஓரமாகச் செலுத்தி மற்றுமொரு பாரிய விபத்தைத் தவிர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்