ஒரே மேடையில் ரணிலுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வவுனியா விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைபின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டிருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதியின் இணைப்புச் செயலகத் திறப்பு விழாவில் செல்வம் அடைக்கலநாதனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் கலந்துகொண்டிருந்தார்.

ஆசிரியர்